எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் நாடு முழுமையாக முடக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் தற்போதே கூற முடியாது என்று விசேட வைத்திய நிபுணர் ஜுட் ஜயமஹ (Judd Jayamaha) தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“ எதிர்வரும் ஏப்ரல் மாதம் பண்டிகை காலம் என்பதனால், தற்போதிருந்தே மிக அவதானமாக செயற்பட வேண்டும்.
நாளுக்கு நாள், கிழமைக்கு கிழமை மற்றும் மாதாந்தம் காணப்படுகின்ற நிலைமை குறித்து ஆராய்ந்தே, எதிர்கால தீர்மானங்கள் எட்டப்படும்“
நாட்டில் பொது மக்களின் செயல்பாடுகளே எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய பிறழ்வு வந்தாலும், முகக்கவசத்தை அணிந்திருந்தால் பரவாது.
"இன்னொரு விடயம் என்னவென்றால், நாடு இயல்பு நிலைக்கு வரவில்லை, புதிய பொதுமைப்படுத்தலுக்குதான் நாம் சென்றுள்ளோம்."
"நம் நாட்டில் கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஒன்றாக தொற்றிய நோயாளர்கள் இதுவரை பதிவாகவில்லை. அவ்வாறு பதிவானாலும், இது ஒரு பாரிய பிரச்சனை இல்லை." என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்தாண்டு சித்திரைப் புத்தாண்டு காலத்தில் முழுமையாக நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், அப்போது நாடு முடக்கப்படவில்லை. அதன் விளைவே மூன்றாவது கொரோனா அலை ஏற்பட காரணமாக அமைந்தது என்று எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
0 comments: