Home » » ஒமிக்ரோன் தொடர்பில் புதிய கண்டுபிடிப்பு

ஒமிக்ரோன் தொடர்பில் புதிய கண்டுபிடிப்பு

 


ஒமிக்ரோன் வைரஸ் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கும் என்றும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கும் மேல் உயிர்வாழும் என்று தெரியவந்துள்ளது.


ஒமிக்ரோன் வைரஸ் பற்றி ஜப்பானில் உள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு நடத்தி உள்ளது. இதில் குறித்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், உருமாறிய கொரோனா வைரஸ்கள், சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை தொடர்பு பரிமாற்றத்தின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் அவற்றின் பரவலுக்கு பங்கு அளிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் பிளாஸ்டிக் பரப்பின் மீது 56, ஆல்பா 191.3, காமா 59.3, பீட்டா 156.6, டெல்டா 114 மணி நேரம் வாழும், ஒமிக்ரோன் 191.3 மணி நேரம் வாழும்.

ஒமிக்ரோன் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிர்வாழ்கிறபோது, ஆல்பா 19.6, பீட்டா 19.1, காமா 11, டெல்டா 16.8 மணி நேரம் உயிர்வாழும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |