( றம்ஸீன் முஹம்மட்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேராசிரியர். அல்லாமா எம் எம் உவைஸ் சிறப்பு நினைவு நூற்றாண்டு விழா இன்று மிகவும் விமரிசையாக கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டுமண்டபத்தில் இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபுக்கர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் தபால் திணைக்களத்தால் 25 ரூபா பெறுமதியான முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டது,
.இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் திணேஸ் குணவர்த்தன பிரதம அதிதியாகவும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி.சம்பத் அமரதுங்க கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தென்கிழக்குபல்கலைக்கழக பதிவாளர் , விரிவுரையாளர்கள் என பலரும் பங்கேற்றனர்
0 Comments