( அஸ்ஹர் இப்றாஹிம்)
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்ததினால் மிகவும் கடுமையாக பாதிப்புக்குட்பட்ட மன்னார் மாவட்டத்தின் கரிசல் மற்றும் பேசாலை ஆகிய பகுதியைச் சேர்ந்த பிரதேச மக்களுக்கு தலா 11000/= ரூபாய் பெறுமதியான 110 அத்தியவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் , முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ. காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பேரில் தனியார் சமூக தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் அண்மையில் கரிசல் அலாவுந்தீன் பாடசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சமூக தொண்டு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜனாப். மிஹ்லார், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments