( அஸ்ஹர் இப்றாஹிம்)
சர்வதேச மாசியல் ஆட்ஸ் சம்மேளனத்தின் (international Martial Arts Association ) இலங்கை கிளையின் ஏற்பாட்டில் புதிய மற்றும்கலர் பட்டி மாணவர்களுக்கான கராட்டே தரப்படுத்தல் பரீட்சை கடந்த திங்கட் கிழமைஇலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதான கராத்தே பயிற்சிநிலையத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் பிரதம போதனாசிரியர் முஹம்மது இக்பால் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் புதிய மாணவர்களும் ஏனைய கலர்ப்பட்டி மாணவர்களும் பங்கேற்று தமது அடுத்த கட்ட தரங்களுக்கு சித்தியடைந்துள்ளனர்.மேலும் கறு ப்புப்பட்டி மற்றும் சிரேஸ்ட கறுப்புப்பட்டி மாணவர்களுக்கான டிப்ளோமா தரப்படுத்தல் பரீட்சை எதிர்வரும் 16.02.2022 இல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments