தமிழ் வருடத்தின் 10 ஆவது மாதமாக வருவது தை மாதம். இந்த மாதத்தில் தான் சூரியன் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைந்து இருப்பார்.
பண்டைய காலத்திலிருந்தே, தமிழர்கள் சூரியன் மகர ராசியில் நுழையும் மாதத்தை திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பொன்மொழி பன்னெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது.
அதாவது புதுமனை புகுவிழா, வரன் பார்ப்பது, மணப் பொருத்தம் பார்ப்பது, திருமணம் என எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் தை மாதம் பிறக்கட்டும் என்று குறிப்பிடுவதற்காகவே இந்த பழமொழி உருவாக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
அன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், கிராமப் பகுதிகளில், ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கோ அல்லது நகர்புறத்திற்கோ வருவதற்கு, விளை நிலங்களைத் தான் பயன்படுத்துவார்கள். அதாவது, தை மாதம் முதல் ஆனி மாதம் முதல் விவசாய நிலங்களில் அறுவடை முடிந்து நிலங்கள் காய்ந்திருக்கும். அப்போது இந்த விளை நிலைங்களின் வழியாகவே பிற கிராமங்களுக்கும், நகரத்திற்கும் சென்று வருவார்கள். அதைக் குறிப்பிடுவதற்காகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியாக சொல்லி இருக்கிறார்கள்.
தை மாத தொடக்கம் தான் உத்தராயண காலத்தின் தொடக்கமாகும். இந்த மாதத்தில் தான் சூரியன் தக்ஷிணாயன பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பவம் வடக்கு திசையில் பயணிக்கும் உத்தராயண காலமாகும். தட்சிணாயன காலத்தில் பருவத்தில் விவசாயப்பணிகளான, உழவுப் பணிகள் தொடங்கி, நாற்று நட்டு, விளைச்சலை பெருக்கும் காலமாகும். அது வரையில் விளைந்துவந்த பயிர்களை அறுவடை செய்யும் காலமாக உத்தராயண காலம் விளங்குகிறது.
ஆறு மாதகாலம் பயிர்கள் அனைத்தையும் நல்ல முறையில் விளைவிக்க உறுதுணையாக இருந்த சூரியபகவானுக்கு உரிய முறையில் நன்றி செலுத்தும் விதமாகவும் தை மாதப்பிறப்பை பண்டைய காலம் முதலே தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். தை முதல் நாளில் சூரியனுக்கு பொங்கலிட்டு வணங்கி வருகின்றனர்.
சங்க காலத்தில் பெண்கள் தங்கள் வாழ்க்கைக்கு நல்வழி காட்ட வேண்டும் என்பதற்காக தை மாதத்தில் கடவுளை வேண்டி விரதம் இருப்பார்கள்.
அதைப் பற்றிய பரிபாடல் ஒன்றில்,
´நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல விழுத் தகை பெறுக என வேண்டுவதும் என்மாரும் பூ வீழ் அரியின் புலம்பப் போகாது யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும் கிழவர் கிழவியர் என்னாது ஏழ்காறும் மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக என்மாரும்´ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments: