Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் – அதிபர் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

 


அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் சேவை ஆகியவை தனித்தனி சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு கல்வி அமைச்சின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில், குறிப்பிடப்பட்ட சேவைகள் 2021 ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் மூடப்பட்ட சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சேவையினதும் நியமனங்கள், பதவி உயர்வுகள், ஒழுக்காற்று நடவடிக்கைகள், இடமாற்றங்கள் மற்றும் ஏனைய ஸ்தாபன விடயங்கள் மீதான அதிகாரம் மற்றும் ஏற்பாடுகள் தற்போது உள்ளவாறு தொடரும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சேவைக்கும் குறிப்பிட்ட சம்பள கட்டமைப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.

Post a Comment

0 Comments