சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக சுழற்சி முறையில் மின்சாரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது
இதன்படி தீர்மானிக்கப்பட்டுள்ள நேர அட்டவணைக்கு அமைவாக மின்துண்டிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது. மின்தடை இடம்பெறும் நேரங்கள்
A பிரிவு : 17:30 தொடக்கம் 18:30 வரை
B பிரிவு: 18:30 தொடக்கம் 19:30 வரை
C பிரிவு : 19:30 தொடக்கம் 20:30 வரை
D பிரிவு: 20:30 தொடக்கம் 21:30 வரை மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளின் காரணமாக இன்று இரவு மற்றும் நாளை இரவு மின்வெட்டு டைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 5.45 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒரு மணி நேரமும், நாளை பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இரண்டு மணி நேரமும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கத்தின் உறுப்பினர் எரங்க குடஹேவா இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம் எரிபொருள் தட்டுப்பாட்டினால் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
மேலும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்னும் 7 மணித்தியாலங்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மூன்று நாட்களில் டீசல் கிடைக்கவில்லை என்றால், மின்வெட்டு மூன்று மணிநேரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments