நான்கு மணிநேர மின்வெட்டு உறுதி! வெளியானது இறுதி அறிவிப்பு
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இலங்கை மின்சார சபைியன் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் இதனை அறிவித்துள்ளார்.
நாளை (24) முதல் ஒரு மணி நேரம் மின்வெட்டு இருந்தாலும், அதனை மேலும் இரண்டு மணி நேரமாக நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அடுத்த வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இந்த செயன்முறையை தொடர முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் இலங்கை மின்சார சபை நிச்சயமாக 4 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது வறட்சியற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் நீர்மின் நிலையங்கள் முழு கொள்ளளவுடன் இயங்கி வருவதாகவும் அவர் எச்சரித்தார்.
இதனால் எதிர்காலத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரினை வழங்க முடியாத நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments: