Advertisement

Responsive Advertisement

10 நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் உள்ளது ; மீளக் கொண்டு வர போதுமான டொலர் இல்லை


 (சிஹாரா லத்தீப்)


அவுஸ்திரேலியா நாட்டுக்கான இலங்கை மற்றும் மாலைதீவுக் கான தூதுவர் டேவிட்கோலி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்செய்துள்ளார்.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவுஸ்திரேலிய தூதுவர் டேவிட் கோலி மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து இம்மாவட்டத்தின் தேவைகள் பற்றி கலந்துரையாடியதுடன் தற்போதைய நில வரங்களைக் கேட்டு அறிந்த தூதுவர் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சி காணுவதற்கு பாரிய பங்களிப்பு செய்ய இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபருடன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வளவிலுள்ள டச்சு கோட்டையை எதிர்காலத்தில் சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்து இம்மாவட்டத்திற்கு பயனுள்ள துறையாக சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான செய்வதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

இது தவிர மட்டக்களப்பு புதிய நூலகத்தில் நவீன வசதிகளை ஏற்படுத்துவதற்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார் இந்த சந்திப்பின்போது அரசாங்க அதிபர் அவுஸ்ரேலியா தூதுவருக்கு பிள்ளையார் சிலை ஒன்றை ஞாபகார்த்தமாக அன்பளிப்புச் செய்தார். பதிலீடாக அவுஸ்திரேலிய தூதுவரும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அந்நாட்டின் ஞாபகம் பொறிக்கப்பட்ட சின்னம் ஒன்றை அன்பளிப்பு செய்தார்.

இந்த சந்திப்பின்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் காணி பிரிவுக்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நப ரூவா ரஞ்சினி முகுந்தன் நபரொருவர் ரங்கேலி முகுந்தன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட பல அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர். தூதுவர் இந்த சந்திப்பை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள டச்சுக் கோட்டையை பார்வையிட்டார்.

இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலிய தூதுவர் இலங்கை அரசாங்கத்துடன் நட்புறவை பேணுவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் மிகுந்த விருப்பத்துடன் இருப்பதாகவும் எதிர்காலத்தில் தமது நாடு அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments