சிறிலங்கா அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்காக மக்களுக்கு தண்டனை வழங்கக் கூடாது எனவும் நிதி நெருக்கடியில் இருந்து மீள, இந்தியாவின் உதவியை சிறிலங்கா அரசுக்கு வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இந்திய அதிகாரிகள் அவசர தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவிடம் கோரியுள்ள கடன் தொடர்பாக இந்திய அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாட்டை கேட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்,
எவ்வாறாயினும் நாட்டு மக்களின் சுதந்திரம், உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச, இந்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments