Home » » கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

 


தரம் ஒன்றுக்கான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்படும் எனவும், இதற்கமைய 2022 ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.


கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதை குறிப்பிட்டார்.

பாடசாலைகள் 2021 டிசம்பர் 23 அன்று மூடப்பட்டு, புதிய கல்வியாண்டிற்காக 2022 ஜனவரி 03 அன்று மீண்டும் திறக்கப்படும்.

கொரோனா காலக்கட்டத்தில் விடுபட்ட பாடத்திட்டங்களை முடிக்க வேண்டியிருப்பதால் முதல் தவணை ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும்.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 3ஆம் வாரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரியிலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை சற்று தாமதித்து ஏப்ரலில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும்.

இது தொடர்பான சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டு தற்போது வழமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் அதனை பயன்படுத்தி அனுமதிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

விடுபட்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கும் வகையில் ஏனைய தரங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தரம் ஒன்றின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |