Home » » அரச தலைவர் கோட்டாபயவுக்கு ஐ.நாவில் இருந்து விசேட கடிதம்

அரச தலைவர் கோட்டாபயவுக்கு ஐ.நாவில் இருந்து விசேட கடிதம்

 


சிறிலங்காவில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக மீளாய்விற்கு உட்படுத்தி, அதன் பாதகமான சரத்துக்களை திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் பொறிமுறையின் கீழ், மனித உரிமைகளுக்கு உரியவாறு மதிப்பளிக்கப்படுவதுடன் அவை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பிய கடிதத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரையில், பயங்கரவாத் தடைச்சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துமாறும் கோரியுள்ளனர்.

மிகுந்த கரிசனைகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் இப்பயங்கரவாத் தடைச்சட்டத்தில் காணப்படும் சரத்துக்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமையினை நினைவுறுத்துவதுடன், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அதனை உடனடியாக மீளாய்வு செய்யவேண்டியதன் அவசியத்தை உங்களது அரசாங்கத்திற்கு மீளவலியுறுத்துகின்றோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |