மெதிரிகிரிய, குசும்பொகுன பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குசும்பொகுண ஆரம்ப பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் எச்.கே சமந்த கவிந்து சந்தருவன் குமார என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பந்து இரண்டு நாட்களுக்கு முன் வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் விழுந்துள்ளது. பந்தை எடுத்து தருமாறு பலமுறை கேட்டும் தந்தை மறந்துள்ளாா்.
தாய் தனது இளைய சகோதரனுடன் அயல் வீட்டிற்கு சென்றிருந்த போது கிணற்றிலிருந்து பந்தை எடுக்க முற்பட்ட போதே சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிறுவன் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் மெதிரிகிரிய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததன் பின்னா் பல்வேறு இடங்களில் பெற்றோர் சிறுவனை தேடியுள்ளனா். இருந்தபோதும் சிறுவன் கிடைக்கிவல்லை.
கிணற்றில் விழுந்ததாக கூறப்படும் பந்து முற்றத்தில் காணப்பட்டுள்ளதுடன், இரவு 7.00 மணியளவில் தோட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் கட்டப்பட்டிருந்த கிணற்றில் வீழ்ந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மெதிரிகிரிய பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.
0 comments: