Home » » இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

 


சந்தேகத்துக்கு இடமான நாணயத்தாள் ஒன்று காணப்பட்டால் பாதுகாப்புச் சின்னம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் அதனைத் தம்வசம் வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் போலி நாணயத்தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை, பயன்படுத்துதல் அல்லது அச்சடித்தல் போன்ற குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாணயத்தாளை கொண்டுவந்தவர், அவரது தோற்றம், வாகனத்தில் வந்தால் வாகனத்தின் விவரம், பணத்தாளின் மதிப்பு மற்றும் வரிசை எண் ஆகியவற்றைப் பதிவு செய்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.

அல்லது குற்றப் புலனாய்வு துறையின் போலி நாணயப் பிரிவினரின் 0112422176 மற்றும் 0112326670 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்க வேண்டும் என காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போலி நாணயத்தாள்களை அச்சடித்து விநியோகிப்பது தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு காவல்துறை மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |