Advertisement

Responsive Advertisement

திருக்கோவில் துப்பாக்கிச்சூடு – கைதான பொலிஸ் உத்தியோகத்தரிடம் தொடர் விசாரணை!

 


திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலம் குறித்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு குறித்த பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம், பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமது தாயாரைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு செல்வதற்கு விடுமுறை கிடைக்கப்பெறாமை காரணமாக, குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக சந்தேகநபர் விசாரணைகளில் தொடர்ச்சியாக தெரிவித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு இறுதியாக ஏழு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்ததாக விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒவ்வொரு மாதமும் அவர் விடுமுறை பெற்றுள்ளதாகவும் விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரின் வாக்குமூலம்குறித்து பொலிஸ் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments