Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அவசரமாக நாடு திரும்பிய கோட்டாபய- பதவி துறக்க தயாராகும் சமல்? அரசாங்கத்திற்குள் வலுக்கும் பனிப்போர்!

 




சிங்கப்பூருக்கு தனிப்பட்ட விஜயமாக சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ச அவசரமாக நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக குறித்த பயணத்தை மேற்கொண்டிருந்த அவர் நாளைய தினமே நாடு திரும்ப இருந்தார். எனினும் இன்று அதிகாலை அவர் நாடு திரும்பியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, நிதி அமைச்சர் பசில் ராஜபகச் இன்று அதிகாலை தனிப்பட்ட விஜயமாக அமெரிக்கா சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் அரச தலைவரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டுமென ஆளுங்கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அவர் பதவி நீக்கம் செய்யப்படாவிடின் தமது அமைச்சுப் பொறுப்பை துறக்கப்போவதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையிலேயே கோட்டாபய அவசரமாக நாடு திரும்பியுள்ளார் என்றும் இன்று முக்கிய பல சந்திப்புகளை நடத்துவார் என்றும் தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments