மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடியின் ஆசிரியை திருமதி.ல.குருகுலசிங்கம் அவர்கள் 17.02.2015 அன்று அவரது பிறந்த தினத்துடன் ஓய்வு பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவர் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஆரம்பபிரிவில் சேவையாற்றுயுள்ளார். இவர் இறுதியாக ஆரம்ப பிரிவு பகுதித் தலைவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவரின் பல்வேறுபட்ட சேவைகளும் நினைவுகூரப்பட்டு பாராட்டப்பட்டது. இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் பொன் வன்னியசிங்கம் அவர்கள் தலைமையில் பாடசாலை ஒன்றுகூடலில் 16.02.2015 பி.ப. 1.00 அளவில் இடம்பெற்றது. 17.02.2015 ஓய்வு பெற இருக்கின்ற ஆசிரியையினால் பாடசாலைச் சமூகத்துக்கு சிற்றூண்டி வழங்கல் நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. அந்நிகழ்வின் போது பாடசாலையின் நலன்புரிச் சங்கத்தின் சார்பாகவும் பாடசாலைச் சமூகம் சார்பாகவும் மாலைகள் அணிவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தப்பட்டு கெளரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். இந்நிகழ்வின் போது அதிபர் உபஅதிபர் ஆசிரியர்கள் ஆசிரியையைப் பாராட்டி கருத்தரை வழங்கினர்.
0 Comments