இந்திய கேப்டன் டோனி கூறும் போது, ‘பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கி இருப்பதன் மூலம் கொஞ்சம் நெருக்கடி குறைந்திருப்பதாக நினைக்கிறேன். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருப்பது என்ற புள்ளி விவரங்கள் பெருமிதம் அளிக்கிறது. ஆனால் சாதனைகள் நிலையானது அல்ல. அது மட்டுமின்றி ஒட்டுமொத்த ஒரு நாள் போட்டியில் நமக்கு எதிராக பாகிஸ்தான் தான் அதிகமான (72–51) வெற்றிகளை பெற்றிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள். இந்த வகையில் பார்த்தால் அவர்கள் மிகச்சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை.
எனவே என்றாவது ஒரு நாள் அல்லது விரைவில் இந்த சாதனையை முறியடித்து விடுவார்கள். அது அடுத்த உலக கோப்பையில் நடக்கலாம் அல்லது மேலும் 4 உலக கோப்பை கழித்து நடக்கலாம்.’ என்றார்.
சத நாயகன் விராட் கோலி கூறும் போது, ‘எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் இதுவும் ஒன்று. உலக கோப்பையை நாங்கள் தொடங்கி இருக்கும் விதம் வியப்புக்குரியது. நமது நாட்டிற்காக சிறப்பாக விளையாடும் போதும் எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். எதிர்பார்ப்பையும், நெருக்கடியையும் நான் விரும்புகிறேன்’ என்றார்.
0 Comments