மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக மீண்டும் மா.தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார் .
கிழக்கு மாகாண ஆளுநரால் கடந்த நவம்பர் 30ம் திகதி வழங்கப்பட்ட கடிதத்தில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக சிவலிங்கம் நியமிக்கப்பட்டிருந்தார் , அதன் பின்னர் மா.தயாபரன் ஆணையாளராக தான் தொடர்ந்து இருப்பதாகவும் கூறியிருந்தார் .
இதே வேளை இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக ந.சிவலிங்கம் இன்று (புதன்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார் .
பின்னர் இன்று 3.00 மணியளவில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக மீண்டும் மா.தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் கடந்த ஒரு வருடமாக மாநகரசபையின் ஆணையாளராக கடமையாற்றி வருகிறார்
0 Comments