Advertisement

Responsive Advertisement

கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட தயாவதியின் உடலத்திற்கு பல்துறை சார்ந்தோரால் இறுதியஞ்சலி


 மட்டக்களப்பு அரசடி பார் வீதியில் நகைகளைக் கொள்ளையடிப்பதற்காக கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட இரு பிள்ளைகளின் தாயான தயாவதியின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை (23) அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.


வர்த்தகரும் சமூக சேவகருமாகிய கௌரவ கலாநிதி கந்தையா செல்வராஜாவின் மனைவியின் இறுதிக் கிரியையில் அன்னாரின் உடலத்திற்கு அரசியல் பிரமுவர்கள், வர்த்தக சமூகத்தினர், அரிமாக் கழக அங்கத்தவர்கள் மற்றும் றோட்டறிக் கழக அங்கத்தினர்கள் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி மற்றும் இறுதி மரியாதை செலுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் இராஜபுத்திரன் சாணக்கியன், மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் தேசபந்து எம். செல்வராஜா, களுவாஞ்சிக்குடி வர்த்தகசங்கத் தலைவர் வி.ஆர்.மகேந்திரன், மட்டக்களப்பு லயன்ஸ் கழக முன்னாள் தலைவர் எந்திரி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் அஞ்சலி உரையாற்றினர்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் இந்திரக்குமார் பிரசன்னா, லயன்ஸ் கழகத்தின் இலக்கம் 306 சி மாவட்ட முன்னாள் ஆளுனர்களான விக்கும்பிரிய வீரக்கொடி, திலக் பெரேரா, தற்போதைய இரண்டாம் உப ஆளுனர் ஸ்மத் ஹமீட் ஆகியோருடன் பிரதம ஆலோசகர் லயன் ஏ.செல்வேந்திரனும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.







Post a Comment

0 Comments