Advertisement

Responsive Advertisement

மின் விநியோகத் தடை தொடரும் – முக்கிய அறிவிப்பு

 


நாடளாவிய ரீதியில் நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின் விநியோகத் தடை ஏற்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், மின்பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை இன்னும் சில நாட்களுக்கு நாளாந்த மின் துண்டிப்பு தொடரும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிவரை மின் விநியோகத் தடை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments