மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் வசித்து வரும் சிங்கள மக்கள் தங்களது கிராமத்தில் இருக்கும் பிரதான பிக்குவை உடனடியாக நீக்குமாறு கோரி இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுத்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக 11 வயது மதிக்கத்தக்க பிக்கு படிப்பினை படிப்பிற்காக வந்த சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் ஊடாக சிறைப்பிடிக்கப்பட்டு இருந்தார்.
பிணை மனு அடிப்படையில் மீளவும் வெளியில் வந்த பிக்கு குறித்த விகாரையில் தொடர்ந்தும் இருப்பதனால் பிக்குவை உடனடியாக நீக்குமாறு கோரியும் தங்களது மாணவர்களது சமய நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்கு அச்சம் உள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments