Advertisement

Responsive Advertisement

முச்சக்கர வண்டியை பந்தாடிய ரயில்! பாய்ந்து உயிர் தப்பிய சாரதி

 


கொழும்பில் இருந்து காங்கேசன்துறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டிய ரயில் முச்சக்கர வண்டியொன்றை மோதித் தள்ளியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் ஓமந்தை - தாண்டிக்குளம் பகுதியில் இன்று முற்பகல் 10.45 இடம்பெற்றுள்ளது.


தாண்டிக்குளம் ரயில் நிலையத்துக்கு அண்மையில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முயன்ற முச்சக்கர வண்டி வித்தில் சிக்கி சேதமடைந்ததுடன் இதன் சாரதி பாய்ந்து உயிர்தப்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments