Advertisement

Responsive Advertisement

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

 


(துஸ்யந்தன்)பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக கந்தையா செல்வராசா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை கிழக்குமாகாண கல்விச் செயலாளர் வழங்கியுள்ளார்.

கோட்டைக்கல்லாறு கிராமத்தைச் சேர்ந்த அதிபர் க.செல்வராசா தற்போது பெரியகல்லாற்றில்  வசித்துவருகின்றார். இவர் தனது ஆரம்பக்கல்வியை கோட்டைக்கல்லாறு கண்ணகி வித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியை கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை  கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் உயிரியல் விஞ்ஞனப் பிரிவில் கற்றுள்ளார்.

1992 இல் விஞ்ஞான ஆசிரியராக ஆசிரியர் சேவைக்குள் நுழைந்து கொண்டவர் தனது முதல் நியமனத்தை தான் கல்வி கற்ற கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்திலே பெற்று சேவைபுரிந்துள்ளார். அதன் பின் பெரிய போரதீவு பாரதி வித்தியாலயத்தில் கடமையாற்றியுள்ளார். 2012 இல் அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்ட்டவர் மகிழுர் சரஸ்வதி வித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றியுள்ளார். பின் சிறிது காலம்  பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் அதிபராகவும் இருந்துள்ளார். மேலும் கோட்டைக்கல்லாறு கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் சேவையாற்றிக் கொண்டிருந்த நிலையில் தற்போது கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக தனது கடமைகளைப்பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

அதிபர் க.செல்வராசா சாரணிய உதவி தலைமைப் பயிற்றுனராக பயிற்சி பெற்று  உதவி மாவட்ட சாரணர் ஆணையாளராகவும் கடமையாற்றிவருகின்றார். 2017 இல் சாரணியத்திற்காக ஜனாதிபதி விருதும் பெற்றுள்ளார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் பல மாணவர்கள் சாரணியத்தில் சாதனைபடைத்துள்ளனர். அத்துடன் கிராமங்களிலுள்ள சமய சமூக நிறுவனங்களின் தலைவராகவும் பிரதிநிதியாகவும் இருந்து பல்வேறு சமூக சேவைகளை ஆற்றிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது  .

Post a Comment

0 Comments