Advertisement

Responsive Advertisement

இலங்கையின் கையிருப்பில் இருக்கும் டொலர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்!

 


நாட்டில் தற்பொழுது கையிருப்பில் இருக்கும் டொலர்களின் பெறுமதி 1.6 பில்லியன் டொலர்கள் மட்டுமே என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தங்களினால் செய்யப்படும் மோசடிகளைப் போன்றே பிட்ச் ரேடிங் தரப்படுத்தல் நிறுவனமும் மேற்கொள்ளும் என அரசாங்கம் கருதுகின்றது.

பிட்ச் ரேடிங் நிறுவனம் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரப்படுத்தல் நிறுவனமாகும்.

இந்த தரப்படுத்தல் நடவடிக்கைகள் விஞ்ஞானபூர்வ நடைமுறைகளுக்கு அமைய உண்மையான தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது. இதனை பொய் என யாராலும் கூற முடியாது.

நாட்டில் தற்பொழுது கையிருப்பில் இருக்கும் டொலர்களின் பெறுமதி 1.6 பில்லியன் டொலர்கள் மட்டுமே.

இதேவேளை, பிட்ச் ரேடிங் நிறுவனத்தின் கடன் தரப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கூறுவது நகைப்பிற்குரிய விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments