ஐந்து மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்றையதினம் (20) 24 மணித்தியால அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.
இதன்படி, மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இடமாற்ற சபையின் அனுமதியின்றி வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை நியமித்தமைக்கு எதிராக இன்று (20) காலை 8 மணிக்கு குறித்த பணிப் புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், பணிப் புறக்கணிப்பையும் மீறி, அவசர வைத்திய சேவைகள் தொடர்ந்தும் இயங்கும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
0 Comments