Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” நிகழ்வு கல்லாறு பகுதியில்! !""

 


எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலும் கல்லாறு கிராமத்தை சேர்ந்த தற்சமயம் லண்டனில் வசிக்கும் சுதாகர் கலிஷ்கா அவர்களின் பூரண அனுசரணையிலும்  உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும்  கருப்பொருளில் பெரியகல்லாறு இந்து கலாசார மண்டபத்தில் இம்மாதம் 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற உள்ளது. 
இந்த இரத்ததான முகாமில் உதிரம்  கொடுக்க முடிந்த அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு தாங்களும் ஒரு கொடையாளியாக மாறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுள்ளனர்.


தற்கால covid 19 சூழல் கருதி நிகழ்வானது சுகாதார உத்தியோகத்தர்களின் ஆலோசனைக்கு அமைவாக சகல சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடனும் சமூக அக்கறையுடனும் சமூக இடைவெளிகளுடனும் இடம் பெறும் என்பதையும் அறியத் தருவதோடு முதல் 100 கொடையாளிகளுக்கு ஞாபகார்த்த அன்பளிப்பாக ரீசேட் ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments