Advertisement

Responsive Advertisement

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தேசிய கராத்தே போட்டியில் 5 பதக்கங்கள்.

 



(  எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


இலங்கை தேசிய கராத்தே போட்டி கடந்த புதன்கிழமை பண்டாரகம உள்ளக அரங்கில் நடைபெற்றது. 

21 வயதுக்கு மேற்பட்ட சிரேஸ்ட மற்றும் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவினர்களுக்கிடையில் கிலோ அடிப்படையில் நடைபெற்ற போட்டியில் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 

இதில் கிழக்கு மாகாண கராத்தே சம்மேளன தலைவரும் IMA சங்க தலைவருமான முகம்மத் இக்பால் அவர்களினால் பயிற்சி வழங்கப்படுகின்ற தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களான ரீ.ஐ.எஸ்.பீரீஸ் ,எச்.எம்.ஸசீன் ஆகியோர் வெள்ளி பதக்கங்களையும், டபிள்யு.ரீ.ஏ.சந்தரூவன் , எம்.எச்.முர்சிதீன் ,டி.எம்.கே.எஸ்.திசநாயக ஆகியோர் வெண்கல  பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்

Post a Comment

0 Comments