(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் 72 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கல்லூரியின் ஸ்தாபகர் மர்ஹும் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் ஞாபகார்த்தமாக ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசன் அனுசரணையில் "ஸாஹிரா ஒரு சரித்திரம் "எனும் தலைப்பில் நடாத்தப்பட்ட கட்டுரை மற்றும் சித்திரப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் ஸாஹிராவின் ஆவணத்தொகுப்பு வெளியிடும் நிகழ்வும் இன்று சிரேஸ்ட இலத்திரனியல் ஊடகவியலாளரும் , பிரபல அறிவிப்பாளருமான எஸ்.ரீ.ரோஸன் அஸ்ரப் தலைமையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் கலந்து கொண்டார்.
இந் நிகழ்விற்கு ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசன் ஸ்தாபகர்களான சட்டத்தரணி மரியம் நளிமுதீன் , டொக்டர் எஸ்.நளிமுதீன் ஆகியோர் வழிகாட்டிகளாக திகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments: