பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கராச்சியில் இன்று ஷெர்ஷா பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தின் அடியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
கழிவு நீர் அமைப்பில் இருந்து வெடி விபத்து நிகழ்ந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், எரிவாயு கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது மீத்தேன் வாயுவால் வெடி விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகே தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் இதனால் அங்கு இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
0 comments: