நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 508 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 578,947 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 17,031 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை,கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 343 பேராக அதிகரித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 547,182 ஆக அதிகரித்துள்ளது நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,734 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 05 பெண்களும் 09 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments