Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் - கொரோனா கொத்தணி உருவாகக்கூடிய அபாயம்

 


தீபாவளி பண்டிகை, நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள நகரப் பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.

ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், பொகவந்தலாவை, புஸல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும்  மலையக நகர் பகுதிகளில் இன்று இந்நிலைமையே காணப்பட்டது.

 சில பகுதிகளில் மழைக்கு மத்தியிலும் வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தது. பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளதால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே தாம் பண்டிகையை கொண்டாடுவதாக மக்கள் வெளியிடும் கருத்துகள் மூலம் அறியமுடிந்தது.

 மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதால் கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் தொழிலுக்கு சென்றவர்கள் இன்று தமது வீடுகளை நோக்கி திரும்பினர்.

இதனால் பொதுபோக்குவரத்து சேவையும் அதிகரிக்கப்பட்டிருந்தது. அதேவேளை நகர்பகுதிகளுக்கு வந்திருந்தவர்களுள் பெரும்பாலானவர்கள் முறையாக முகக்கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.

கடைகளுக்கு முன்னால் கைககளை கழுவுவதற்கு எந்தவொரு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை. மக்கள் கூட்டம் திரண்டிருந்ததினால் கொரோனா தீபாவளி கொத்தணி உருவாகக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 


Gallery Gallery Gallery Gallery Gallery

Post a Comment

0 Comments