பாதணி ஜோடிக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் கையடக்கத் தொலைபேசிகள் நான்கை மறைத்து வைத்துக்கொண்டு களுத்துறை சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்ல முயன்ற கைதியொருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர், கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், பாணந்துறை நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்.
அந்த கைதியை களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்று சோதனைக்கு உட்படுத்திய போதே, அக்கைதி அணிந்திருந்த இரண்டு பாதணிக்குள்ளிருந்தும் தலா இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என நான்கு கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன
0 comments: