Home » » கொரோனாவின் உண்மையை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளர் சீனாவில் உயிருக்கு போராட்டம்

கொரோனாவின் உண்மையை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளர் சீனாவில் உயிருக்கு போராட்டம்

 


சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் உருவாகி பரவியதன் யதார்த்தத்தை வெளிக்காட்டிய பத்திரிகையாளர் ஜாங் ஜான் சிறையில் கடுமையாக பலவீனமடைந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.


எனினும், சிறையில் இருந்து அவர் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

சீனாவில் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோயின் தொடக்கத்தில் வுஹானில் உள்ள ஒரு மருத்துவமனை நடைபாதையில் வரிசையாக நோயாளிகள் இருந்த காட்சிகளை ஜாங் பகிர்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் உலகின் கவனத்தை ஈர்த்தார்.

சீன அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்த ஜாங் எடுத்த முயற்சிகளுக்கும், அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் அவர் மிகப்பெரிய விலையை செலுத்த வேண்டி இருந்தது. அவர் மே மாதம் கைது செய்யப்பட்டார்

37 வயதான அவருக்கு சண்டைகளைத் துவக்கி பிரச்சனைகளை உருவாக்கியதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனக்கு வழங்கப்பட்ட சட்டவிரோத தண்டனையை எதிர்த்து அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால், ஜாங் மிகவும் மெலிந்து அடையாளம் காண முடியாத நிலையில் இருக்கிறார் என தெரிவிக்கப்படுகின்றது.

நாசி குழாய்கள் வழியாக அவருக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்கப்பட்டதாக வழக்கறிஞர் கூறினார்.

“சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து, அவர் தனது சட்டவிரோத தண்டனைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறார்,” என்று ஜாங்கிற்காக போராடும் சட்டக் குழுவின் உறுப்பினர் ஜாங் கேகே கூறினார்.

சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து சீன அரசாங்கம் செய்வது தவறு என்பதையும், தனக்கு இழைக்கப்பட்ட தண்டனை சட்டத்தையும் தனி மனித உரிமையையும் மீறும் வகையில் உள்ளது என்பதையும் அவர் எடுத்துக்காட்ட விரும்புகிறார்.

இந்த நிலையில் அவர் மரணத்தை நெருங்கியுள்ளார் என அவரது சகோதரர் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து சர்வதேச மன்னிப்புச் சபை “அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும், இதனால் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், அவளுக்குத் தேவையான தகுந்த மருத்துவ சிகிச்சையைப் பெறவும்” சீன அரசாங்கத்தை வலியுறுத்தியது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |