Advertisement

Responsive Advertisement

திருகோணமலையில் சிறுவர்கள் பலியான துயரம்- காவல்துறையில் சிக்கிய சந்தேக நபர்கள்!

 


திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் பொருத்தப்பட்ட குறித்த மிதப்புப் பாலத்தை இயக்கிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சாக்கேணியில் நேற்று  மிதப்புப் பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து முன்னெடுத்த விசாரணைகளையடுத்து கிண்ணயா காவல்துறை பிரிவில் ஒருவரும், திருகோணமலை காவல்துறை பிரிவில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளுக்காக சந்தேக நபர்களைத் தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments