திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று இடம் பெற்ற படகு விபத்தின் போது கிண்ணியா தளவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு பேர் சகிச்சையை முடித்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இன்று மதியம் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஜிப்ரி தெரிவித்துள்ளார். இதில் இரு சிறுவர்களும் நான்கு ஆண்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
படகு விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கும் மற்றுமொருவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டிருந்தனர்.
தற்போது ஏனையோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார். இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு சென்று படகு விபத்தில் சிக்கியவர்களை நலன் விசாரித்திருந்தார்.
பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்த படகு விபத்து சம்பவம் பெரும் கவலையளிக்கிறது குறிஞ்சாக்கேணி பால விடயத்துடன் சம்மந்தப்பட்ட, இதன் பின்புலத்தில் உள்ளவர்களை தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments