Advertisement

Responsive Advertisement

மட்/சிவாநந்த வித்தியாலய தே.பாடசாலையின் விசேட தேவையுடைய (Brail) மாணவன் பா.பிரசோபன் தேசிய ரீதியில் சாதனை!!!

 


மட்/சிவாநந்த வித்தியாலய தே.பாடசாலை விசேட தேவையுடைய (Brail) மாணவன் பா.பிரசோபன் தேசிய ரீதியில் சாதனை!!!







க.பொ.த. (சா/த) பரீட்சை - 2020 ல் தோற்றி சித்தியடைந்து,  மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது இடமும், கிழக்கு மாகாணத்தில்  முதலாவது இடமும் , தேசிய ரீதியில் இரண்டாவது இடமும் பெற்று விசேட தேவையுடைய மட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை மாணவன் பெருமை சேர்த்துள்ளார்.  இதற்காக இம் மாணவனுக்கு கல்வி அமைச்சில் பாராட்டுவிழா (கல்வி அமைச்சரால்) 22.11.2021 இடம்பெற்றது.  அத்தோடு அலரிமாளிகைக்கு பிரதமரால்  அழைக்கப்பட்டு பாராட்டு விழா இடம் பெற்றதோடு, Mobil Phone ம் பரிசாக பிரதமரால் வழங்கப்பட்டது. தேசிய ரீதியில் 20 மாணவர்கள் பாராட்டப்பட்டனர். இவர்களில் பா.பிரசோபன் என்பவர் மட்டுமே ஒரே ஒரு தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. இம் மாணவன் மட்/சிவாநந்த வி.தே.பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். சாதனை படைத்த மாணவனை பாடசாலைச் சமூகம் வாழ்த்துகின்றது. அத்துடன் www.Kurunews.com குழுமத்தினரும் வாழ்த்துகின்றனர்.

Post a Comment

0 Comments