Advertisement

Responsive Advertisement

மொஹமட் சாணக்கியன் என கூறியதால் சபையில் சர்ச்சை

 


வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனை கீழ்த்தரமான அரசியல்வாதியென திட்டித்தீர்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், எந்தத் தகுதியும் திலீபனுக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.


வரவு- செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று (17) கலந்துகொண்டு உரையாற்றிய திலீபன் எம்.பி, பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை “மொஹமட் சாணக்கியன்“ என தனது உரையில் கூறியிருந்தார்.

எனினும் இதன்போது சாணக்கியன் சபையில்லை என்பதால் உடனடியாக ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி திலீபனின் சர்ச்சைக்குரிய கூற்றுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த ஸ்ரீதரன் எம்.பி, இராசமாணிக்கம் இராஜபுத்திர சாணக்கியன் என்கிற பெயரை மாற்றி மொஹமட் சாணக்கியன் திலீபன் தனது உரையில் கூறுகிறார். இதுவொரு கீழ்த்தரமான செயலாகும். அதனால், இதனை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை தவறாக கூறுவது பாராளுமன்ற சட்டத்திட்டங்களுக்கு முரணானது என்றார். இந்த (திலீபன்) படிக்காத பாராளுமன்ற உறுப்பினரை திருத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments