பாடசாலை மாணவர்களிடையேயும் தற்போது கொவிட் தொற்று அதிகரித்துள்ளதன் விளைவாக பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டியிருக்கும் என வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெரியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டில் கொவிட் தொற்று அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தற்போது இலங்கை முழுவதும் கொவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம்.
குழந்தைகள் மத்தியில் கொவிட் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே இவ்வாறு அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகளை மூடவேண்டி ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அதனைவிடுத்து நோயை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்
0 comments: