Advertisement

Responsive Advertisement

40,000 மெற்றிக் தொன் டீசல், 36,000 மெற்றிக் தொன் பெற்றோலுடன் இலங்கைக்கு விரையும் வெளிநாட்டு கப்பல்கள்

 


சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்தது.

மேலும் 36,000 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு எண்ணெய் தாங்கி இன்று (18) இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாளை (19ஆம் திகதி) இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வந்த கப்பலின் மூலம் கொண்டுவரப்பட்ட 40,000 மெற்றிக் தொன் டீசல் இறக்கும் பணி நேற்று (17ஆம் திகதி) ஆரம்பமானதுடன், இந்த பணிகள் சுமார் இரண்டு நாட்களில் நிறைவடையும் எனவும் குறிப்பிட்டார்.

இதனால், நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை, எனவே யாரும் பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளை வீட்டில் இருப்பு வைக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments