Advertisement

Responsive Advertisement

இரு வாரங்களில் மீண்டும் ஊரடங்கு ? − சுகாதார தரப்பு வெளியிட்ட தகவல்

 


எதிர்வரும் இரண்டு வார காலப் பகுதியில் பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு அமைய, மீண்டும் ஊரடங்கு அல்லது பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

அவ்வாறு இல்லையெனில், பொதுமக்களின் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்தும் கலந்துரையாடப்படும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் ரஞ்ஜித் பட்டுவன்துடுவ தெரிவிக்கின்றார்.

எனினும், கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் முயற்சி மக்களிடம் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிவதாக அவர் கூறுகின்றார்.

கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடனேயே, மக்கள் அதிகளவில் நடமாடுகின்றமை குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்

Post a Comment

0 Comments