Home » » கொழும்பில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்! உயர் அதிகாரிகளுக்கு அரச தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்! உயர் அதிகாரிகளுக்கு அரச தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவு

 


கொழும்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நிரந்தர போக்குவரத்து திட்டம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், கொழும்பு போன்ற புறநகர் பகுதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் குறித்து அவதானம் செலுத்தி திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என சிறிலங்கா காவல்துறை, விமானப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கோட்டாபய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பு போன்ற புறநகர் பகுதிகளில் ட்ரோன் கெமராக்கள் இயக்கப்பட்டு, வரும் வாரத்தில் சிறப்பு ஆய்வு நடத்தப்படும். எந்தெந்த பகுதிகளில் நெரிசல் ஏற்படுகின்றது? காரணங்கள் என்ன? என்று முதலில் ஒரு ஆய்வு நடத்தப்படும்.

அந்த ஆய்வின் பின்னர் எதிர்காலத்தில் கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான நிரந்தர போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே ட்ரோன் கெமரா இயக்கத்தின் நோக்கமாகும்.

மக்கள் நகருக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வசதி செய்தல் போன்ற அனைத்து வசதிகளும் இதில் அடங்கும் என்று குறிப்பிட்டார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |