ஷமி மண்டூர்)
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பிரதேசத்தில் தனது வயலினை பார்வையிடச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (10) மரணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் களுதாவளை பிரதேசத்தைச்சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணபிள்ளை கந்தசாமி வயது (63) என்பவரே நேற்று காலை தனது வீட்டிலிருந்து திக்கோடை பிரதேசத்தில் உள்ள தனது வயலினை பார்வையிட சென்றதாகவும் அதன் பின்னர் தனது வயலில் மயக்கமுற்று கிடந்ததனை கண்ட அருகில் நின்ற நபர் ஒருவர் வீதியில் சென்றவர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு சென்று கடமையில் இருந்த வைத்தியர்கள் பரிசோதித்த போது குறித்த நபர் மரணமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்டதனை உறுதிப்படுத்தியதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் க.ஜீவராணி அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments