Advertisement

Responsive Advertisement

உயர்த்தப்பட்ட எரிவாயுவின் விலை திடீரென மீண்டும் குறைப்பு!! விபரம் வெளியானது

 இலங்கையில் நேற்றையதினம் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்று சிறியளவில் குறைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

நேற்று அதிகரித்த சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க


தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,675 ஆக மாற்றமடைந்துள்ளது. 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 30 ரூபாவாலும், 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 14 ரூபாவாலும் குறைக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை புதிய விலை 1,071 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 506 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் அதிகரித்த விலைகள் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Post a Comment

0 Comments