மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டிற்கு முன்னாள் கடந்த யூன் 21 ம் திகதி பொதுமகன் மீது துப்பாக்கிச் சூடு நடாத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய் பாதுகாவலரை தொடர்ந்து எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி.எம். றிஸ்வான் இன்று(04) இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த துப்பாகிச்சூட்டுச் சம்பவத்தில் ஊறணியைச் சோந்த 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் கைது செய்யப்பட்டுத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்று நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது தொடர்ந்து 18 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments