வீடுகளில் இருக்கும் கொவிட் -19 நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெற பதிவு செய்ய ஒரு புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நோயாளியை பதிவு செய்வதற்கு முன்னர் தகவல் பிராந்திய மருத்துவ அதிகாரியால் பெறப்பட்டது என சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகளின் பணிப்பாளரான வைத்தியர். அயந்தி கருணாரத்ன தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய அமைப்பின் மூலம், நோயாளிகள் நேரடியாக தங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
90,821 கொரோனா நோயாளிகள் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது 6,035 நோயாளிகளே வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய 1390 என்ற ஹொட்லைன் இலக்கத்தின் ஊடாக அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களின் உடல் நலன் குறித்த முடிவுகளை எட்ட முடியும் என்று அவர் தெரிவித்தார்.
0 comments: