Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெல்லாவெளி பகுதியில் எட்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு

 


மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 38ஆம் கிராமத்தில் உள்ள வாய்க்காலிலிருந்து இன்று  ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 38ம் கிராமத்தின் 3ம் வட்டாரத்தில் வசிக்கும் 47வயதுடைய 8 பிள்ளைகளின் தந்தையான அமரசிங்கம்-சுந்தரலிங்கம் என உறவினர்களால் அடையாளம் கானப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை வீட்டில் இருந்து வயலுக்கு போனவர் இன்று (02) வீடு திரும்பாத நிலையில் வயல் வடிகான் நீருக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Gallery Gallery 

Post a Comment

0 Comments