Advertisement

Responsive Advertisement

பாடசாலைகளை மீள திறப்பதற்கு வேலைத்திட்டம்

 


பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைய, பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளார்.


இதற்கமைய, மீள திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் சூழல், வகுப்பறை, கதிரைகள், உபகரணங்களை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைத்தல் தொடர்பில் ஆளுநர்களின் தலையீட்டில் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

200-க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவையும் 100-க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளினதும் கல்வி நடவடிக்கைகளையும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில மதிப்பீடுகளுக்கு அமைய சுமார் 3000 பாடசாலைகள் இந்த மாதத்தில் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments