Advertisement

Responsive Advertisement

யொஹானி டி சில்வாவுக்கு அரச விருது

 


“மெனிக்கே மகே ஹித்தே” பாடல் மூலம் உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் பிரபல இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு அரச விருது ஒன்றை வழங்கி கௌரவிக்க உள்ளதாக தேசிய உரிமைகள், இசை கலை, கிராமிய கலைஞர்கள் ஊக்குவிப்பு விவகார இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wickremanayake) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்காக பிரதமர் தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற யொஹானி டி சில்வா என்ற இளம் பாடகிக்கு அரசாங்கம் தனது கௌரவத்தை வழங்குகிறது.

கலைஞர்களுக்கு இப்படியான விருதுகளை வழங்குதில் மாத்திரம் இருந்து விடாது, வாழ்நாள் முழுவதும் கலைத்துறையில் அபிமானத்துடன் செயற்படக் கூடிய அடிப்படையை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே (Hesha Withanage) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற இளம் பாடகியான யொஹானி டி சில்வாவுக்கு அரசாங்க தரப்பில் இதுவரை எவ்வித கௌரவிப்பும் வழங்கப்படவில்லை என ஹேசா விதானகே குற்றம் சுமத்தியதுடன் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments